• Nov 23 2024

39 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் - ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அவகாசம்!

Chithra / Aug 15th 2024, 11:10 am
image

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இதேவேளை, இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்கும் போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தெரிவான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடா்ந்து சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் அடையாளங்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

39 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் - ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அவகாசம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்கும் போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தெரிவான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தொடா்ந்து சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் அடையாளங்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement