• Sep 17 2024

வாகன விபத்துக்களில் இருவர் பலி!

Chithra / Aug 15th 2024, 10:25 am
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தோட்ட வீதியில் சின்னகட்டி கோவிலுக்கு அருகில் உள்ள கிளை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை அதன் செலுத்துனரால் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த செலுத்துனர் உயிரிழந்தார்.

56 வயதுடைய களுதேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மடு பொலிஸ் பிரிவில் பூமலர்ந்தான் மடு - வீதியில் பூமலர்ந்தான் சந்தியில் பயணித்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரில் ஒருவர் வௌியே வீசப்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பூமலர்ந்தான் சோதிநகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்துக்களில் இருவர் பலி  நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தோட்ட வீதியில் சின்னகட்டி கோவிலுக்கு அருகில் உள்ள கிளை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை அதன் செலுத்துனரால் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த செலுத்துனர் உயிரிழந்தார்.56 வயதுடைய களுதேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை, மடு பொலிஸ் பிரிவில் பூமலர்ந்தான் மடு - வீதியில் பூமலர்ந்தான் சந்தியில் பயணித்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரில் ஒருவர் வௌியே வீசப்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பூமலர்ந்தான் சோதிநகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement