துப்பாக்கி வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
வலஸ்முல்ல - ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்த நபர் ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார்.
இறந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் பயணித்த நபர் திடீரென நடந்த சம்பவம் - பறிபோன உயிர் துப்பாக்கி வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , வலஸ்முல்ல - ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்த நபர் ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார். இறந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது .இதேவேளை கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .