• Sep 20 2024

இலங்கையில் 41 இடங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு

harsha / Dec 9th 2022, 2:30 pm
image

Advertisement

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.

கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், கம்பஹா மாவட்டத்தில் 390 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, கொழும்பு பிராந்தியத்தில் 272 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2021 இல் கண்டறியப்பட்ட 27,844 பேருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையில் உள்ள 41 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 41 இடங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், கம்பஹா மாவட்டத்தில் 390 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, கொழும்பு பிராந்தியத்தில் 272 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அத்துடன் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.2021 இல் கண்டறியப்பட்ட 27,844 பேருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும் இலங்கையில் உள்ள 41 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement