• Sep 20 2024

பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள்! சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jan 15th 2023, 9:51 am
image

Advertisement

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரிதான மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட தீவின் புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு அரிதான மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட தீவின் புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement