இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9688 குடும்பங்களை சேர்ந்த 45344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(25) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் 3455 குடும்பங்களை சேர்ந்த 11815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்குபேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மேல்மாகாணத்தில் 6294 குடும்பங்கள் உட்பட 25165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 811வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த மாகாணத்தில் 37குடும்பங்களை சேர்ந்துள்ள137 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 536 குடும்பங்களை சேர்ந்துள்ள1946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகல் முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றும் 422வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 5401குடும்பங்களை சேர்ந்துள்ள 21685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 379 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 37 குடும்பங்களை சேர்ந்துள்ள 137 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் 357 குடும்பங்கள் உட்பட 1534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1089 பேர் உட்பட 3724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 213 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 801 குடும்பங்கள் உட்பட 2634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 776 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, மற்றும் காற்றினால் 286குடும்பங்கள் உட்பட 1078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 282 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வடமாகாணத்தில் 445 குடும்பங்களை சேர்ந்துள்ள 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 432 குடும்பங்களை சேர்ந்துள்ள 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சப்பிரகமுவ மாகாணத்தில் 490 குடும்பங்களை சேர்ந்துள்ள 1849 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் 448குடும்பங்களை சேர்ந்த1686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும் 420 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கேகாலை மாவட்டத்தில் 42 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 45 ஆயிரம் பேர் பாதிப்பு. 7 பேர் உயிரிழப்பு. இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9688 குடும்பங்களை சேர்ந்த 45344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(25) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் 3455 குடும்பங்களை சேர்ந்த 11815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்குபேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.மேல்மாகாணத்தில் 6294 குடும்பங்கள் உட்பட 25165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 811வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த மாகாணத்தில் 37குடும்பங்களை சேர்ந்துள்ள137 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.களுத்துறை மாவட்டத்தில் 536 குடும்பங்களை சேர்ந்துள்ள1946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகல் முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றும் 422வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கம்பஹா மாவட்டத்தில் 5401குடும்பங்களை சேர்ந்துள்ள 21685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 379 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 37 குடும்பங்களை சேர்ந்துள்ள 137 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் 357 குடும்பங்கள் உட்பட 1534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1089 பேர் உட்பட 3724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 213 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 801 குடும்பங்கள் உட்பட 2634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 776 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.மாத்தறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, மற்றும் காற்றினால் 286குடும்பங்கள் உட்பட 1078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 282 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.வடமாகாணத்தில் 445 குடும்பங்களை சேர்ந்துள்ள 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தில் 432 குடும்பங்களை சேர்ந்துள்ள 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனமுல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.சப்பிரகமுவ மாகாணத்தில் 490 குடும்பங்களை சேர்ந்துள்ள 1849 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 448குடும்பங்களை சேர்ந்த1686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும் 420 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.கேகாலை மாவட்டத்தில் 42 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.