• Mar 16 2026

வெள்ளத்தினால் பாதிப்புக்குட்பட்ட மக்களுக்கு 500 தண்ணீர் போத்தல்கள் விநியோகம்!

shanu / Dec 9th 2025, 9:39 am
image

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்த சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மக்களுக்கான நலத்திட்ட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 


அண்மைய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்றையதினம் (08) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 5 லீற்றர் கொள்ளளவு கொண்ட 500 தண்ணீர் போத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பிராந்திய முகாமையாளரான ப. கஜமுகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நலத்திட்டப் பணியில், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான குகனேசன் ஆகியோர் இணைந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


மொத்தம் 500 தண்ணீர் போத்தல்கள் கீழ்க்காணும் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன:


மன்னாங்கண்டல் கிராம சேவையாளர் பிரிவு – 198 தண்ணீர் போத்தல்களும், ஒளிரும் வாழ்வு நிறுவனம் (அங்கவீனமுற்றோரின் நிறுவனம்) – 40 தண்ணீர் போத்தல்களும்,  தேவிபுரம் கிராம சேவையாளர் பிரிவு – 132 தண்ணீர் போத்தல்களும், வள்ளிபுனம் கிராம சேவையாளர் பிரிவு – 130 தண்ணீர் போத்தல்களும் வழங்கப்பட்டன.


சமூக நலனை குறிக்கோளாக கொண்டு சினோபெக் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த உதவிகள், தற்போதைய அனர்த்த சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிப்புக்குட்பட்ட மக்களுக்கு 500 தண்ணீர் போத்தல்கள் விநியோகம் இலங்கையில் 2023 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்த சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மக்களுக்கான நலத்திட்ட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அண்மைய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்றையதினம் (08) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 5 லீற்றர் கொள்ளளவு கொண்ட 500 தண்ணீர் போத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பிராந்திய முகாமையாளரான ப. கஜமுகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நலத்திட்டப் பணியில், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான குகனேசன் ஆகியோர் இணைந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மொத்தம் 500 தண்ணீர் போத்தல்கள் கீழ்க்காணும் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன:மன்னாங்கண்டல் கிராம சேவையாளர் பிரிவு – 198 தண்ணீர் போத்தல்களும், ஒளிரும் வாழ்வு நிறுவனம் (அங்கவீனமுற்றோரின் நிறுவனம்) – 40 தண்ணீர் போத்தல்களும்,  தேவிபுரம் கிராம சேவையாளர் பிரிவு – 132 தண்ணீர் போத்தல்களும், வள்ளிபுனம் கிராம சேவையாளர் பிரிவு – 130 தண்ணீர் போத்தல்களும் வழங்கப்பட்டன.சமூக நலனை குறிக்கோளாக கொண்டு சினோபெக் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த உதவிகள், தற்போதைய அனர்த்த சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement