• Jun 14 2026

காலி முகத்திடலை அலங்கரித்த 5,000 கலைஞர்கள் - மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை

Chithra / Jun 14th 2026, 2:06 pm
image

கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. 


சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த நிகழ்வு, புதிய உலக சாதனையாக அரங்கேறியுள்ளது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி எனக் குறிப்பிடப்பட்ட இந்த முயற்சி, கின்னஸ் உலகச் சாதனை பதிவுக்காக முன்வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிகழ்வை இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையைச் சேர்ந்த 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்'  ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


காலி முகத்திடல் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளை ஒருங்கிணைந்து நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.


இந்த நிகழ்வு மூலம் இலங்கை கலாசார கலைத்துறையில் புதிய வரலாறு பதியப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


 இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் . ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்து இதற்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவித்தார்.


“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்  பிரதீப்பிடம் மேடையில் வைத்து கையளித்தார்.


சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


காலி முகத்திடலை அலங்கரித்த 5,000 கலைஞர்கள் - மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த நிகழ்வு, புதிய உலக சாதனையாக அரங்கேறியுள்ளது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி எனக் குறிப்பிடப்பட்ட இந்த முயற்சி, கின்னஸ் உலகச் சாதனை பதிவுக்காக முன்வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வை இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையைச் சேர்ந்த 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்'  ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.காலி முகத்திடல் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளை ஒருங்கிணைந்து நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.இந்த நிகழ்வு மூலம் இலங்கை கலாசார கலைத்துறையில் புதிய வரலாறு பதியப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் . ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்து இதற்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவித்தார்.“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்  பிரதீப்பிடம் மேடையில் வைத்து கையளித்தார்.சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement