• Aug 04 2026

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு

Chithra / Aug 4th 2026, 12:50 pm
image


அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.


அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement