மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த 92 பேரைக் கௌரவிக்கும் மாகாண மட்ட விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (12) நடைபெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் ரில்கோ (Tilko) ஹோட்டலில் காலை 9.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்கள், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும் அங்கீகரித்து, அவர்களுக்குச் சமமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய 92 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த 92 பேரைக் கௌரவிக்கும் மாகாண மட்ட விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (12) நடைபெற்றது.சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் ரில்கோ (Tilko) ஹோட்டலில் காலை 9.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்கள், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும் அங்கீகரித்து, அவர்களுக்குச் சமமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.