அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காததால், வாகனங்களின் விலைகள் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதனால் வாகனங்களைக் கொள்வனவு செய்வதையும் பலர் ஒத்திவைத்திருந்தனர்.
ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சு, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டின் டொலர் கையிருப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டே சலுகைகள் வழங்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
மேலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதே பெரிய விடயம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால், தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைவதற்கான வாய்ப்பில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன விலைகள் குறையுமா பாதீட்டில் ஏமாற்றம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காததால், வாகனங்களின் விலைகள் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதனால் வாகனங்களைக் கொள்வனவு செய்வதையும் பலர் ஒத்திவைத்திருந்தனர்.ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியதாகத் தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சு, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டின் டொலர் கையிருப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டே சலுகைகள் வழங்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.மேலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதே பெரிய விடயம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கமைய, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இதனால், தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைவதற்கான வாய்ப்பில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.