• Nov 13 2026

500 ஏக்கர் நிலப்பரப்பு சரியும் அபாயம்! முக்கிய பகுதி பேராபத்தில் - பேராசிரியர் எச்சரிக்கை

Chithra / Nov 13th 2026, 1:10 pm
image


கடுகண்ணாவை பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு எந்த நேரத்திலும் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


பஹல கடுகண்ணாவையிலிருந்து குகைக்கல் பகுதி வரையான ரயில் பாதைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


'டித்வா' அனர்த்தத்தின் போது குறித்த பகுதியை அவதானித்ததாகவும், அங்கு மண்ணின் உறுதியற்ற தன்மையைத் தெளிவாகக் கண்டறிய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அந்தப் பகுதியில் உறுதியற்ற பாரிய கற்பாறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும், கடும் மழையின்போது அவை மண்ணுடன் சேர்ந்து பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், அடுத்துவரும் நாட்களில் மழை அதிகரித்தால் கடுகண்ணாவை பகுதியில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


ரயில் பாதைக்கும் பிரதான வீதிக்கும் இடையிலுள்ள அபாயகரமான கற்பாறைகளை 'லிடார்' (LiDAR) தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் காண முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.


எனவே, மழையுடனான காலநிலை குறைவடைந்த பின்னர் பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

500 ஏக்கர் நிலப்பரப்பு சரியும் அபாயம் முக்கிய பகுதி பேராபத்தில் - பேராசிரியர் எச்சரிக்கை கடுகண்ணாவை பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு எந்த நேரத்திலும் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பஹல கடுகண்ணாவையிலிருந்து குகைக்கல் பகுதி வரையான ரயில் பாதைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.'டித்வா' அனர்த்தத்தின் போது குறித்த பகுதியை அவதானித்ததாகவும், அங்கு மண்ணின் உறுதியற்ற தன்மையைத் தெளிவாகக் கண்டறிய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அந்தப் பகுதியில் உறுதியற்ற பாரிய கற்பாறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும், கடும் மழையின்போது அவை மண்ணுடன் சேர்ந்து பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், அடுத்துவரும் நாட்களில் மழை அதிகரித்தால் கடுகண்ணாவை பகுதியில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.ரயில் பாதைக்கும் பிரதான வீதிக்கும் இடையிலுள்ள அபாயகரமான கற்பாறைகளை 'லிடார்' (LiDAR) தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் காண முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.எனவே, மழையுடனான காலநிலை குறைவடைந்த பின்னர் பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement