இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,
54 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மட்டுமே இலாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
நஷ்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது விளக்கினார்.
இலங்கை போக்குவரத்து சபையில் 7,137 பேருந்துகள் உள்ளன, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது மொத்தம் 25,384 பேர் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்கள் - வௌிப்படுத்திய அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 54 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மட்டுமே இலாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார்.நஷ்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது விளக்கினார்.இலங்கை போக்குவரத்து சபையில் 7,137 பேருந்துகள் உள்ளன, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார்.அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை.இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது மொத்தம் 25,384 பேர் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.