• Aug 20 2026

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி தப்ப முயன்ற 6 சாரதிகள் கைது! பரந்தன் சோதனைச்சாவடியில் அதிரடி

Chithra / Aug 19th 2026, 3:14 pm
image


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச்சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் 6 டிப்பர் சாரதிகள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.


பரந்தன் சந்தியிலுள்ள பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்ல முயன்ற போது, குறித்த டிப்பர் சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது 6 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களுடன் தொடர்புடைய 5 டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி தப்ப முயன்ற 6 சாரதிகள் கைது பரந்தன் சோதனைச்சாவடியில் அதிரடி கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச்சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் 6 டிப்பர் சாரதிகள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.பரந்தன் சந்தியிலுள்ள பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்ல முயன்ற போது, குறித்த டிப்பர் சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 6 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களுடன் தொடர்புடைய 5 டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement