பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
31 வயதுடைய ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று புதன்கிழமை நண்பர்களுடன் மது அருந்திய பின்னர் வீட்டிற்கு அருகில் வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அவர், இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஆனால், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த மரணம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மது அருந்தியபோது இடம்பெற்ற கொலையா அல்லது பிரதான வீதியில் விழுந்து கிடந்தபோது ஏதேனும் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த மர்ம முடிவு; மனைவியின் வாக்குமூலத்தில் அதிர்ச்சி பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.31 வயதுடைய ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.நேற்று புதன்கிழமை நண்பர்களுடன் மது அருந்திய பின்னர் வீட்டிற்கு அருகில் வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அவர், இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை.ஆனால், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்த மரணம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மது அருந்தியபோது இடம்பெற்ற கொலையா அல்லது பிரதான வீதியில் விழுந்து கிடந்தபோது ஏதேனும் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.