காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய பேருவளை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 ஆண்களும்,
25, 43 மற்றும் 53 வயதுடைய யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்களுமாவர்.
சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர்.
ஆனால் வழங்கப்பட்ட காசோலைக்கான பணம் உரிய வங்கிக்கணக்கில் இருந்திருக்கவில்லை.
இதையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 6 பேரையும் பண மோசடி குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காசோலையை காண்பித்து மோசடி - யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சிக்கினர். காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய பேருவளை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 ஆண்களும்,25, 43 மற்றும் 53 வயதுடைய யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்களுமாவர்.சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர்.ஆனால் வழங்கப்பட்ட காசோலைக்கான பணம் உரிய வங்கிக்கணக்கில் இருந்திருக்கவில்லை. இதையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 6 பேரையும் பண மோசடி குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.