தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பலநாள் மீன்படி படகில் இருந்து 251.18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதவான், இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீன்படி படகில் போதைப்பொருள் கடத்திய 6 பேரும் தடுப்பு காவலில். தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த பலநாள் மீன்படி படகில் இருந்து 251.18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதவான், இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.