மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நெல்லை பயிரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் புதன்கிழமை (14) மாலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் , 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இக் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விரிவாக ஆராயப்பட்டது.
கட்டுக்கரை குளம், ஏனைய மாகாண விவசாய குளம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய நிலப்பரப்புகளில் இக்கால போகப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
காலபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உர மானியம் வழங்கப்பட உள்ளது.எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, மன்னார் மாவட்ட விவசாயிகள் தங்கள் கமத்தொழில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கரை குளத்திற்கு ஏற்கனவே விவசாய இறுதி விதைப்பு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏனைய இடங்களை பொறுத்தவரை, கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குளங்கள் மற்றும் குளங்கள் சார்பாக வெவ்வேறு விவசாயக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதற்கமைய, பயிற்சி செய்கை காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் எல் நினோ (El Nino) காலநிலை காரணமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனைத் பின்பு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையிலான காலத்தில் நீண்ட வறட்சி நிலவுவதை எதிர் பார்ப்பதன் காரணமாக, நவம்பர், டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடை நிறைவேற்றும் வகையில் மிகக் குறைந்த மாத நெல்லை விதைக்க விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்திற்குப் பின்பு வரும் வறட்சிக்கு முன்பதாக அறுவடையை மேற்கொள்ளக்கூடிய வகையில் இம்முறை பயிர்ச்செய்கை மன்னார் மாவட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை காலபோக செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்ற ஏனைய வர்த்தக வங்கிகளில் கடன் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவற்றுள் காலபோக செய்கையில் ஈடு படும் விவசாயிகளுக்கு 5% வீதம் என்ற அடிப்படையிலும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கிகளில் விவசாயிகளை தங்களுக்குள் பிணையை பரிமாறி, அந்த விவசாயக் கடன் பெறுவதற்குரிய பிணையாளிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுபோக அறுவடைகள் இடம்பெற்று முடிவடைந்துள்ள நிலையில்,இருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்வதற்காக 2 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும், 6 தனியார் மில் உரிமையாளர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் வீதம் கடன் தொகையை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறித்தும்,அந்த குறிப்பிட்ட கடன் தொகையை அவர்கள் 8 மாதத்திற்குப் பின்பு மீள அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த தனது சிறுபோக நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி நீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,நீர்ப்பாசனத் திணைக்களம்,மாகாண நீர்ப்பாசன திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் , கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் , நெல் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் , பிரதி விவசாயப் பணிப்பாளர்,கால்நடை அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.
மன்னாரில் 60 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை; குறுகியகால நெல் ரகங்களைப் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நெல்லை பயிரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் புதன்கிழமை (14) மாலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் , 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இக் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விரிவாக ஆராயப்பட்டது.கட்டுக்கரை குளம், ஏனைய மாகாண விவசாய குளம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய நிலப்பரப்புகளில் இக்கால போகப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.காலபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உர மானியம் வழங்கப்பட உள்ளது.எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, மன்னார் மாவட்ட விவசாயிகள் தங்கள் கமத்தொழில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்திற்கு ஏற்கனவே விவசாய இறுதி விதைப்பு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏனைய இடங்களை பொறுத்தவரை, கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குளங்கள் மற்றும் குளங்கள் சார்பாக வெவ்வேறு விவசாயக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதற்கமைய, பயிற்சி செய்கை காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் எல் நினோ (El Nino) காலநிலை காரணமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் பின்பு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையிலான காலத்தில் நீண்ட வறட்சி நிலவுவதை எதிர் பார்ப்பதன் காரணமாக, நவம்பர், டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடை நிறைவேற்றும் வகையில் மிகக் குறைந்த மாத நெல்லை விதைக்க விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்திற்குப் பின்பு வரும் வறட்சிக்கு முன்பதாக அறுவடையை மேற்கொள்ளக்கூடிய வகையில் இம்முறை பயிர்ச்செய்கை மன்னார் மாவட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இம்முறை காலபோக செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்ற ஏனைய வர்த்தக வங்கிகளில் கடன் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவற்றுள் காலபோக செய்கையில் ஈடு படும் விவசாயிகளுக்கு 5% வீதம் என்ற அடிப்படையிலும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.மேலும், வங்கிகளில் விவசாயிகளை தங்களுக்குள் பிணையை பரிமாறி, அந்த விவசாயக் கடன் பெறுவதற்குரிய பிணையாளிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுபோக அறுவடைகள் இடம்பெற்று முடிவடைந்துள்ள நிலையில்,இருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்வதற்காக 2 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும், 6 தனியார் மில் உரிமையாளர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் வீதம் கடன் தொகையை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறித்தும்,அந்த குறிப்பிட்ட கடன் தொகையை அவர்கள் 8 மாதத்திற்குப் பின்பு மீள அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த தனது சிறுபோக நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி நீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,நீர்ப்பாசனத் திணைக்களம்,மாகாண நீர்ப்பாசன திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் , கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் , நெல் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் , பிரதி விவசாயப் பணிப்பாளர்,கால்நடை அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.