• Oct 15 2026

ஷிரந்தி ராஜபக்ச விவகாரத்தில் இன்று முக்கியமான நாள்! வெளியே வரப்போகும் அறிக்கை என்ன?

Chithra / Oct 15th 2026, 11:45 am
image


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான விசேட மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று  சமர்ப்பிக்கப்படவுள்ளது.


நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


அவரது உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக 14 மருத்துவர்களைக் கொண்ட விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.


குறித்த மருத்துவக் குழு, ஷிரந்தி ராஜபக்சவின் இருதய நோய் நிலைமை மற்றும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக சிகிச்சைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.


அதற்கமைய, மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, 10 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஷிரந்தி ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, நாளை (16) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பில் மருத்துவக் குழு முன்வைக்கவுள்ள பரிந்துரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஷிரந்தி ராஜபக்ச விவகாரத்தில் இன்று முக்கியமான நாள் வெளியே வரப்போகும் அறிக்கை என்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான விசேட மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று  சமர்ப்பிக்கப்படவுள்ளது.நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவரது உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக 14 மருத்துவர்களைக் கொண்ட விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.குறித்த மருத்துவக் குழு, ஷிரந்தி ராஜபக்சவின் இருதய நோய் நிலைமை மற்றும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக சிகிச்சைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.அதற்கமைய, மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, 10 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஷிரந்தி ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, நாளை (16) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பில் மருத்துவக் குழு முன்வைக்கவுள்ள பரிந்துரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement