• Nov 26 2024

நாடளாவிய ரீதியில் 625 பேர் கைது...! வெளியான காரணம்...! samugammedia

Sharmi / Feb 12th 2024, 9:30 am
image

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் 'யுத்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களிடமிருந்து, 160 கிராம் ஹெராயின், 152 கிராம் பனி, கஞ்சா 10 கிலோ 745 கிராம், 34,237 கஞ்சா செடிகள், மாவா 31 கிராம், 683 மாத்திரைகள், துலே 226 கிராம், மதன மோதக 264 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களில் 07 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்தனர்.

மேலும்,  சந்தேகநபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்றுமொரு  சந்தேக நபர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 80 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 03 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 74 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

கைரேகைகள் மூலம் 01 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 02 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 625 பேர் கைது. வெளியான காரணம். samugammedia கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் 'யுத்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவற்றுள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 160 கிராம் ஹெராயின், 152 கிராம் பனி, கஞ்சா 10 கிலோ 745 கிராம், 34,237 கஞ்சா செடிகள், மாவா 31 கிராம், 683 மாத்திரைகள், துலே 226 கிராம், மதன மோதக 264 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களில் 07 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்தனர்.மேலும்,  சந்தேகநபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்றுமொரு  சந்தேக நபர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட 80 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 03 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 74 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.கைரேகைகள் மூலம் 01 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 02 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement