• May 01 2025

பலத்த மழையால் முறிந்து வீழ்ந்த மரம்; தம்பலகாமம் பகுதியில் வீடுகள் சேதம்

Chithra / May 1st 2025, 2:27 pm
image


கனமழையுடன் கூடிய பலத்த காற்றால் நேற்று (30) தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயல பகுதியின் தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவே இவ்வாறு அனர்த்தத்துக்கு இலக்காகியுள்ளது.

இதன் காரணமாக தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டு கூரை உள்ளிட்ட உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


பலத்த மழையால் முறிந்து வீழ்ந்த மரம்; தம்பலகாமம் பகுதியில் வீடுகள் சேதம் கனமழையுடன் கூடிய பலத்த காற்றால் நேற்று (30) தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயல பகுதியின் தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவே இவ்வாறு அனர்த்தத்துக்கு இலக்காகியுள்ளது.இதன் காரணமாக தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டு கூரை உள்ளிட்ட உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement