பெண்ணின் சங்கிலியை இளைஞன் ஒருவர் அசால்ட்டாகத் திருடிச் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தத் திருட்டுச் சம்பவம் சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நேற்று(29) இடம்பெற்றுள்ளது.
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணொருவர் ரயிலுக்காக காத்திருந்தார். அவர் இருந்த பகுதிக்கு வந்த இளைஞன், பெண்ணிற்குப் பக்கத்தில் அமர்ந்தார்.
சாதாரணமாக வந்து அமர்ந்த இளைஞன் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன்பின்னர் அப்பகுதியை சுற்றிமுற்றிப் பார்வையிட்டு யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் சங்கிலியை அசால்ட்டாக அறுத்துக்கொண்டு ஓடினார்.
தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் திடீரென சங்கிலியை அறுத்துச் சென்றதும் சற்றுநேரம் அலமலுத்த பெண், பின்னர் அக்கம் பக்கத்திலுள்ளோரைக் கத்திக் கூச்சலிட்டு தனது சங்கிலியை அந்த இளைஞன் திருடிக் கொண்டு செல்கிறார் என்று புலம்பினார்.
அதனையடுத்து இது தொடர்பில் ரயில் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய ரயில் நிலையத்திலுள்ள சிசிரிவி காணொளியைப் பார்வையிட்ட திருவான்மியூர் ரயில்வே பொலிஸார் திருட்டுடன் தொடர்புடைய இளைஞனைக் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் அசால்ட்டாக வந்த எந்தவொரு பதற்றமுமில்லாமல் பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பெண்ணின் சங்கிலியை அசால்ட்டாக திருடிய இளைஞன்; ரயில் நிலைய சிசிரிவியில் மாட்டியதில் கைதானார் பெண்ணின் சங்கிலியை இளைஞன் ஒருவர் அசால்ட்டாகத் திருடிச் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தத் திருட்டுச் சம்பவம் சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நேற்று(29) இடம்பெற்றுள்ளது. சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணொருவர் ரயிலுக்காக காத்திருந்தார். அவர் இருந்த பகுதிக்கு வந்த இளைஞன், பெண்ணிற்குப் பக்கத்தில் அமர்ந்தார். சாதாரணமாக வந்து அமர்ந்த இளைஞன் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை பார்த்துக் கொண்டிருந்தார். அதன்பின்னர் அப்பகுதியை சுற்றிமுற்றிப் பார்வையிட்டு யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் சங்கிலியை அசால்ட்டாக அறுத்துக்கொண்டு ஓடினார். தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் திடீரென சங்கிலியை அறுத்துச் சென்றதும் சற்றுநேரம் அலமலுத்த பெண், பின்னர் அக்கம் பக்கத்திலுள்ளோரைக் கத்திக் கூச்சலிட்டு தனது சங்கிலியை அந்த இளைஞன் திருடிக் கொண்டு செல்கிறார் என்று புலம்பினார். அதனையடுத்து இது தொடர்பில் ரயில் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய ரயில் நிலையத்திலுள்ள சிசிரிவி காணொளியைப் பார்வையிட்ட திருவான்மியூர் ரயில்வே பொலிஸார் திருட்டுடன் தொடர்புடைய இளைஞனைக் கைது செய்தனர்.குறித்த இளைஞன் அசால்ட்டாக வந்த எந்தவொரு பதற்றமுமில்லாமல் பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.