யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர்.
அச்சுவேலி வல்லைப் பகுதியில் நேற்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது.
இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். இதன்போது வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை
இடையிலேயே அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அடுத்தடுத்து கோர விபத்து; ஒரே குடும்பத்தில் மூவர் காயம் - மூதாட்டி பலி யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர்.அச்சுவேலி வல்லைப் பகுதியில் நேற்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது.இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர்.காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.இதேவேளை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். இதன்போது வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை இடையிலேயே அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.