தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அவசர நோயாளர் காவு வண்டிகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது.
அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், சிதைந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினை உலுக்கிய அதிவேக ரயில்கள் விபத்து; 21 பேர் பலி - 100க்கும் அதிகமானோர் காயம் தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அவசர நோயாளர் காவு வண்டிகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், சிதைந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.