• Jan 19 2026

பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் - அரச தலைவர்களுடன் விசேட சந்திப்பு

Chithra / Jan 19th 2026, 8:17 am
image


சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 


சுவிட்சர்லாந்தின் டெவோஸ் - குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23 ஆம் திகதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு இடம்பெறுகின்றது. 


குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 


"A Spirit of Dialogue" எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. 


இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர். 


இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் - அரச தலைவர்களுடன் விசேட சந்திப்பு சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் - குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23 ஆம் திகதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு இடம்பெறுகின்றது. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். "A Spirit of Dialogue" எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர். இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement