குருணாகல் - அலவ்வ - வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வில்கமுவ பகுதியில் நபர் ஒருவர் உடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.
குறித்த உடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்படுவதால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீரே மதியகனே நாரம்மல பகுதியைச் சேர்ந்த கவிந்து நிமேஷா என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்களின் உதவியுடன், அலவ்வ பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குருணாகலில் இளைஞன் சுட்டுப் படுகொலை; பொலிஸார் தீவிர விசாரணை குருணாகல் - அலவ்வ - வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வில்கமுவ பகுதியில் நபர் ஒருவர் உடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.குறித்த உடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்படுவதால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.வீரே மதியகனே நாரம்மல பகுதியைச் சேர்ந்த கவிந்து நிமேஷா என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்களின் உதவியுடன், அலவ்வ பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.