• Jul 31 2025

கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்!

shanuja / Jul 30th 2025, 5:31 pm
image

கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ,வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (29) காலை 7 மணி முதல் ஈடுபட்டிருந்தனர்.


59 படைப்பிரிவின் ஊடாக 593 பிரிக்கேட் கீழ் ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியினை சேர்ந்த இராணுவத்தினர் , பொதுமக்களுடன் இணைந்து வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


குறித்த சுத்தப்படுத்தும் பணியில் கோம்பாவில் பொதுசுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரகாஸ், கிராம மக்கள், இராணுவத்தினர் இணைந்து கடற்கரையினை சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ,வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (29) காலை 7 மணி முதல் ஈடுபட்டிருந்தனர்.59 படைப்பிரிவின் ஊடாக 593 பிரிக்கேட் கீழ் ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியினை சேர்ந்த இராணுவத்தினர் , பொதுமக்களுடன் இணைந்து வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த சுத்தப்படுத்தும் பணியில் கோம்பாவில் பொதுசுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரகாஸ், கிராம மக்கள், இராணுவத்தினர் இணைந்து கடற்கரையினை சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement