• Aug 01 2025

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழக விடுதிகளாக பயன்படுத்த தீர்மானம்!

Chithra / Jul 31st 2025, 10:23 am
image

 

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழகங்களுக்கான விடுதிகளாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தனியார் துறையினருடன் இணைந்து விடுதிக்கான கட்டடங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தால் கைவிடப்பட்பட்டுள்ள கட்டடங்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.

அத்துடன், பல்கலைக்கழங்களிலிருந்து தூரப்பகுதிகளில் காணப்படும் விடுதிகளுக்கான போக்குவரத்து திட்டங்களை துறைசார் அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துவருவதாகவும் கல்வி பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழக விடுதிகளாக பயன்படுத்த தீர்மானம்  கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழகங்களுக்கான விடுதிகளாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக தனியார் துறையினருடன் இணைந்து விடுதிக்கான கட்டடங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.அரசாங்கத்தால் கைவிடப்பட்பட்டுள்ள கட்டடங்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.அத்துடன், பல்கலைக்கழங்களிலிருந்து தூரப்பகுதிகளில் காணப்படும் விடுதிகளுக்கான போக்குவரத்து திட்டங்களை துறைசார் அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துவருவதாகவும் கல்வி பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement