• Aug 01 2025

டி20 பேட்டிங் தரவரிசையில் 3ஆவது இந்தியராக முதலிடத்தைப் பிடித்த அபிஷேக் சர்மா!

shanuja / Jul 31st 2025, 1:57 pm
image

இந்தியாவின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, தனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சக வீரரான டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலிடத்திலிருந்த சூர்யகுமார் யாதவின் இடத்தை தட்டிப்பறித்த டிராவிஸ் ஹெட், அதற்கு பிறகு ஒரு வருடமாக நம்பர் 1 இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார்.


இந்நிலையில் தற்போது அபிஷேக் சர்மா அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். ஆனால் டிராவிஸ் கடந்த ஒருவருடமாக டி20 போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை, கடைசியாக செப்டம்பர் 2024-ல் ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தவறவிட்டார்.


 

நடப்பாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா  இறுதியாக இந்தியாவுக்காக விளையாடினார். 


அந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்து துவம்சம் செய்த அவர் மிரட்டிவிட்டார். இதன்மூலம் தற்போது ஐசிசியின் டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.


இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சூர்யகுமாருக்குப் பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

டி20 பேட்டிங் தரவரிசையில் 3ஆவது இந்தியராக முதலிடத்தைப் பிடித்த அபிஷேக் சர்மா இந்தியாவின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, தனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சக வீரரான டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலிடத்திலிருந்த சூர்யகுமார் யாதவின் இடத்தை தட்டிப்பறித்த டிராவிஸ் ஹெட், அதற்கு பிறகு ஒரு வருடமாக நம்பர் 1 இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார்.இந்நிலையில் தற்போது அபிஷேக் சர்மா அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். ஆனால் டிராவிஸ் கடந்த ஒருவருடமாக டி20 போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை, கடைசியாக செப்டம்பர் 2024-ல் ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தவறவிட்டார். நடப்பாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா  இறுதியாக இந்தியாவுக்காக விளையாடினார். அந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்து துவம்சம் செய்த அவர் மிரட்டிவிட்டார். இதன்மூலம் தற்போது ஐசிசியின் டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சூர்யகுமாருக்குப் பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement