• Aug 01 2025

பெண்களை விட ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு; வைத்தியர் சமன் இத்தகொட தெரிவிப்பு!

shanuja / Jul 31st 2025, 4:46 pm
image


பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார்.


உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை (ஓகஸ்ட் 1) முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த சில காலமாக ஆண்களுக்கே புற்று நோய் அதிகரித்து வருகின்றது. பெண்களை விடவும் புற்றுநோயால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


நாட்டில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே புற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் புற்றுநோய் அறிகுறி காணப்படின் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களை விட ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு; வைத்தியர் சமன் இத்தகொட தெரிவிப்பு பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார்.உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை (ஓகஸ்ட் 1) முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த சில காலமாக ஆண்களுக்கே புற்று நோய் அதிகரித்து வருகின்றது. பெண்களை விடவும் புற்றுநோயால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே புற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் புற்றுநோய் அறிகுறி காணப்படின் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement