கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு ரயில் சேவையை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express ரயில், சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அதேநேரம், ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த ரயில் பயணிக்கும் எனத் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை வரையில் புதிய சொகுசு ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு ரயில் சேவையை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express ரயில், சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அதேநேரம், ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த ரயில் பயணிக்கும் எனத் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.