• Aug 02 2025

வானில் இரு விமானங்கள் நேருக்கு நேரான பயணம்; கணப்பொழுதில் விபத்திலிருந்து தப்பிக்கும் திக்திக் காட்சி!

shanuja / Aug 1st 2025, 6:28 pm
image

வானில் இரு விமானங்கள் நேராக பயணித்த போதும் விபத்துக்கள் ஏற்படமால் அதிர்ஷ்டவசமாக திசை திரும்பிய காணொளி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கட்டார் விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை, லண்டனில் தரையிறக்க முயன்றுள்ளது.  அதே நேரத்தில் அந்த வழியில் பிரிட்டிஷ் விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளது.


தரையிறக்க முயன்ற கட்டார் விமானமும் பிரிட்டிஷ் இலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றும் நேருக்கு நேராக பயணித்துள்ளது. 


வானில் ஏற்பட்ட மோசமான  காலநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால் குறித்த இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதும் வகையில் பயணித்துள்ளது. 


எனினும் விமானிகள் இருவரும் சாதூர்யமாக விமானத்தை செலுத்தியதால் ஏற்படவிருந்த பாரிய விபத்திலிருந்து இரு விமானங்களும் தப்பியுள்ளன. 


விமானங்கள் இரண்டும் வானில் மோதும் வகையில் பயணித்துள்ள காட்சியைப் பார்க்கையில் ஒரு கணம் திக்திக் நிமிடங்களாக பதிந்துள்ளது. 


விமானங்கள் தொடர்ச்சியாக விபத்திற்குள்ளாகி வருகின்றமையால் விமானம் தொடர்பான செய்திகள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வானில் இரு விமானங்கள் நேருக்கு நேரான பயணம்; கணப்பொழுதில் விபத்திலிருந்து தப்பிக்கும் திக்திக் காட்சி வானில் இரு விமானங்கள் நேராக பயணித்த போதும் விபத்துக்கள் ஏற்படமால் அதிர்ஷ்டவசமாக திசை திரும்பிய காணொளி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை, லண்டனில் தரையிறக்க முயன்றுள்ளது.  அதே நேரத்தில் அந்த வழியில் பிரிட்டிஷ் விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளது.தரையிறக்க முயன்ற கட்டார் விமானமும் பிரிட்டிஷ் இலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றும் நேருக்கு நேராக பயணித்துள்ளது. வானில் ஏற்பட்ட மோசமான  காலநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால் குறித்த இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதும் வகையில் பயணித்துள்ளது. எனினும் விமானிகள் இருவரும் சாதூர்யமாக விமானத்தை செலுத்தியதால் ஏற்படவிருந்த பாரிய விபத்திலிருந்து இரு விமானங்களும் தப்பியுள்ளன. விமானங்கள் இரண்டும் வானில் மோதும் வகையில் பயணித்துள்ள காட்சியைப் பார்க்கையில் ஒரு கணம் திக்திக் நிமிடங்களாக பதிந்துள்ளது. விமானங்கள் தொடர்ச்சியாக விபத்திற்குள்ளாகி வருகின்றமையால் விமானம் தொடர்பான செய்திகள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement