• Aug 02 2025

சம்பூரில் மனித எச்சங்கள் நேரில் பார்வையிட்ட நீதிபதி ; அகழ்வு தொடர்பில் ஆராய 6ஆம் திகதி கலந்துரையாடல்!

shanuja / Aug 2nd 2025, 5:00 pm
image

திருகோணமலை சம்பூரில் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு, மூதூர் நீதிமன்ற நீதிபதி  திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் திடீர் விஜயம் ஒன்றை இன்று (02) மேற்கொண்டார். 


குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அவர் அங்கு சென்றுள்ளார். 


சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில்  கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 


அதன்போது சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட சசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.


இதன் பின்னர் குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. 


குறித்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றி சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிட்டுள்ளது. 


குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மூதூர் நீதிபதி இன்று சம்பூரிற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். 


யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் வெளிவரும் நிலையில் மற்றொரு தமிழர் பகுதியான திருகோணமலையிலும் மனித எச்சங்கள் எழுந்துள்ளமை தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சம்பூரில் மனித எச்சங்கள் நேரில் பார்வையிட்ட நீதிபதி ; அகழ்வு தொடர்பில் ஆராய 6ஆம் திகதி கலந்துரையாடல் திருகோணமலை சம்பூரில் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு, மூதூர் நீதிமன்ற நீதிபதி  திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் திடீர் விஜயம் ஒன்றை இன்று (02) மேற்கொண்டார். குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அவர் அங்கு சென்றுள்ளார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில்  கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட சசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.இதன் பின்னர் குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. குறித்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றி சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிட்டுள்ளது. குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மூதூர் நீதிபதி இன்று சம்பூரிற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் வெளிவரும் நிலையில் மற்றொரு தமிழர் பகுதியான திருகோணமலையிலும் மனித எச்சங்கள் எழுந்துள்ளமை தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement