மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் சென்று படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
4 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த யானை- மட்டக்களப்பில் விபரீதம் மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் சென்று படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.