• Aug 02 2025

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்

Chithra / Aug 2nd 2025, 12:04 pm
image

 

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை -வெருகல் பூநகர் பகுதியில் இன்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்குகிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்  சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை -வெருகல் பூநகர் பகுதியில் இன்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.இதன் போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தொடர்ச்சியாக வடக்குகிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement