• Aug 02 2025

இலங்கைக்கு கிடைத்த வெற்றி; வரியை 20 வீதமாக குறைத்த டிரம்ப்

Chithra / Aug 1st 2025, 7:47 am
image


இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.

இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. 

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தீர்வை வரியை அண்மையில் அதிகரித்து அறிக்கை வெளியிட்டது.

அதன் பிரகாரம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 40 வீதமாக வரி விதிக்கப்பட்ட போதும், ராஜதந்திர நடைமுறைகள் மூலம் குறித்த வரி பின்னர் 30 வீதமாக குறைக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் தொடர் முயற்சிகள் காரணமாக குறித்த வரி தற்போது இன்னும் குறைக்கப்பட்டு, 20 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10% அடிப்படை வரியை எதிர்கொள்ளும், 

அதேவேளை கனடாவின் ஏற்றுமதிகள் மீதான தீர்வை வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19 சதவீதமும், இந்தியா மீது 25 சதவீதமும், மியன்மார் மீது 40 சதவீத வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. 

மேலும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், தாய்வானுக்கு 20 சதவீதமும், தாய்லாந்திற்கு 19 சதவீதமும், வியட்நாமுக்கு 20 சதவீதமும் என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கிடைத்த வெற்றி; வரியை 20 வீதமாக குறைத்த டிரம்ப் இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தீர்வை வரியை அண்மையில் அதிகரித்து அறிக்கை வெளியிட்டது.அதன் பிரகாரம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 40 வீதமாக வரி விதிக்கப்பட்ட போதும், ராஜதந்திர நடைமுறைகள் மூலம் குறித்த வரி பின்னர் 30 வீதமாக குறைக்கப்பட்டது.எனினும் இலங்கை அரசாங்கத்தின் தொடர் முயற்சிகள் காரணமாக குறித்த வரி தற்போது இன்னும் குறைக்கப்பட்டு, 20 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10% அடிப்படை வரியை எதிர்கொள்ளும், அதேவேளை கனடாவின் ஏற்றுமதிகள் மீதான தீர்வை வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19 சதவீதமும், இந்தியா மீது 25 சதவீதமும், மியன்மார் மீது 40 சதவீத வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், தாய்வானுக்கு 20 சதவீதமும், தாய்லாந்திற்கு 19 சதவீதமும், வியட்நாமுக்கு 20 சதவீதமும் என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement