• Aug 02 2025

இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா - சுற்றுலாப் பயணி கவலை

Chithra / Aug 1st 2025, 8:10 am
image


 

அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,

அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.

 

அறுகம் குடா, இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். 

அந்த காணொளியில், எபிரேய மொழி அந்த பகுதியில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். 

அறுகம் குடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 


குறித்த நிலைமையைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்நிலையில் இந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. 



இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா - சுற்றுலாப் பயணி கவலை  அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது. அறுகம் குடா, இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். அந்த காணொளியில், எபிரேய மொழி அந்த பகுதியில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். அறுகம் குடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நிலைமையைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்நிலையில் இந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement