• Aug 01 2025

பெண்களின் ஆடை அணிந்து எரிபொருள் நிலைங்களில் கைவரிசை; வசமாக சிக்கிய மூவர்

Chithra / Jul 31st 2025, 3:28 pm
image


பெண்களை போன்று ஆடை அணிந்து, எரிபொருள் நிரப்பு  நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்ற மூன்று பேர் நேற்று காலை அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பும்மா” , “பச்சி”, “பொடியா” என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

அநுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர மற்றும் கட்டுகெலியாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30, 36 மற்றும் 38 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் எல்லகட்டுவ வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி,

பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு  நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பெண்களின் ஆடை அணிந்து எரிபொருள் நிலைங்களில் கைவரிசை; வசமாக சிக்கிய மூவர் பெண்களை போன்று ஆடை அணிந்து, எரிபொருள் நிரப்பு  நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்ற மூன்று பேர் நேற்று காலை அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட மூவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பும்மா” , “பச்சி”, “பொடியா” என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர மற்றும் கட்டுகெலியாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30, 36 மற்றும் 38 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் மூவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் எல்லகட்டுவ வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி,பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு  நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement