• Aug 01 2025

குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன் விதை- நடந்தது என்ன?

Thansita / Jul 31st 2025, 9:35 pm
image

எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான 86 வயதுடைய ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவது 

எஹெலியகொட பரகடுவ பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூரியன் பழம் சாப்பிட்ட வேளை தொண்டையில் விதை சிக்கியுள்ளது

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோனன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்

இதன்போது சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதாக தெரிவித்திருந்தார்.

எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன் விதை- நடந்தது என்ன எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 86 வயதுடைய ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவது எஹெலியகொட பரகடுவ பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூரியன் பழம் சாப்பிட்ட வேளை தொண்டையில் விதை சிக்கியுள்ளதுஇரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோனன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்இதன்போது சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதாக தெரிவித்திருந்தார்.எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement