• Aug 01 2025

மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி:எலும்புக்கூடுகள் 118ஆக உயர்வு!

Thansita / Jul 31st 2025, 7:30 pm
image

செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்

செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  சட்டத்தரணி தெரிவித்துள்ளார்

இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. 

மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன அத்தோடு மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் வழங்கபட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை 105 மண்டையோட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக சட்டவைத்தியரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து 27ம் நாள் அகழ்வுப்பணி நாளை நடைபெறவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

⭕https://web.facebook.com/share/v/198t31E2EQ/

மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி:எலும்புக்கூடுகள் 118ஆக உயர்வு செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  சட்டத்தரணி தெரிவித்துள்ளார்இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன அத்தோடு மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் வழங்கபட்டுள்ளன.இந்நிலையில் இதுவரை 105 மண்டையோட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக சட்டவைத்தியரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுதொடர்ந்து 27ம் நாள் அகழ்வுப்பணி நாளை நடைபெறவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்⭕https://web.facebook.com/share/v/198t31E2EQ/

Advertisement

Advertisement

Advertisement