• Aug 01 2025

யாழில் மூன்று நாட்களாக காணாமல்போன குடும்பப் பெண்! கணவர் மற்றும் உறவினர்கள் விடுத்த அவசர கோரிக்கை

Chithra / Jul 31st 2025, 1:03 pm
image


யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

இந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,


கடந்த 29ம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண், இரவு 11 மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளார். 

அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை. இதன்பின் பதற்றமடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணாமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டு நிற்கின்றனர்.


யாழில் மூன்று நாட்களாக காணாமல்போன குடும்பப் பெண் கணவர் மற்றும் உறவினர்கள் விடுத்த அவசர கோரிக்கை யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.இந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,கடந்த 29ம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண், இரவு 11 மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளார். அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை. இதன்பின் பதற்றமடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.இதனை தொடர்ந்து காணாமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டு நிற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement