• Aug 01 2025

கண்டியிலுள்ள ஏரியில் மிதந்த சடலம் மீட்பு! பெரஹராவில் பங்கேற்றவருக்கு நடந்த விபரீதம்!

shanuja / Jul 31st 2025, 4:09 pm
image

கண்டி பெரஹெராவில் பங்கேற்ற யானையின் உதவியாளர் ஒருவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கண்டியிலுள்ள ஏரியொன்றிலிருந்தே குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


சடலமாக மீட்கப்பட்டவர் அச்சலங்கா என்ற 28 வயதுடைய நபர்  என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கண்டியின் பெரஹரா ஊர்வலம் யானைகளின் பங்குபற்றுதலுடன் நேற்று இரவு இடம்பெற்றது. 


பெரஹராவில் பங்கேற்கப் பலரும் தமது யானைகளுடன் கலந்துகொண்டனர். அதேபோன்றே குறித்த நபரும் பெரஹராவில் பங்கேற்கும் யானையின் உதவியாளராக அங்கு சென்றுள்ளார். 


பெரஹராவிற்காக அரநாயக்க பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட யானை ஒன்றின் தலைமை பராமரிப்பாளருக்கு உதவியாளராக இருந்துள்ளார். 


நேற்று இரவு இடம்பெற்ற பெரஹராவில் யானையுடன் கலந்துகொண்ட பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பெரஹரா இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையிலிருந்த ஏரியொன்றில் குறித் நபரின் சடலம் மிதந்துள்ளது. அதனை அவதானித்த அப்பகுதியினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 


தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியிலுள்ள ஏரியில் மிதந்த சடலம் மீட்பு பெரஹராவில் பங்கேற்றவருக்கு நடந்த விபரீதம் கண்டி பெரஹெராவில் பங்கேற்ற யானையின் உதவியாளர் ஒருவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கண்டியிலுள்ள ஏரியொன்றிலிருந்தே குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அச்சலங்கா என்ற 28 வயதுடைய நபர்  என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியின் பெரஹரா ஊர்வலம் யானைகளின் பங்குபற்றுதலுடன் நேற்று இரவு இடம்பெற்றது. பெரஹராவில் பங்கேற்கப் பலரும் தமது யானைகளுடன் கலந்துகொண்டனர். அதேபோன்றே குறித்த நபரும் பெரஹராவில் பங்கேற்கும் யானையின் உதவியாளராக அங்கு சென்றுள்ளார். பெரஹராவிற்காக அரநாயக்க பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட யானை ஒன்றின் தலைமை பராமரிப்பாளருக்கு உதவியாளராக இருந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற பெரஹராவில் யானையுடன் கலந்துகொண்ட பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரஹரா இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையிலிருந்த ஏரியொன்றில் குறித் நபரின் சடலம் மிதந்துள்ளது. அதனை அவதானித்த அப்பகுதியினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement