• Aug 01 2025

வெப்பத்திற்கு மாறாக இன்று மழை பெய்யும்!

shanuja / Jul 31st 2025, 10:12 am
image

நிலவும் காலநிலை மாற்றத்தால்  பல மாகாணங்களில்  இன்று பிற்பகல்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 


அந்த வகையில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


தென் மாகாணத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கடந்த சில நாள்களாக  காற்றின் வேகம் அதிகரித்து அவ்வப்போது மழையும் பெய்துவந்தது. எனினும் கடந்த இரு நாள்களாக காற்றின் வேகம் குறைவடைந்து திடீரென வெப்ப காலநிலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்பத்திற்கு மாறாக இன்று மழை பெய்யும் நிலவும் காலநிலை மாற்றத்தால்  பல மாகாணங்களில்  இன்று பிற்பகல்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அந்த வகையில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.தென் மாகாணத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.கொழும்பிலிருந்து காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக  காற்றின் வேகம் அதிகரித்து அவ்வப்போது மழையும் பெய்துவந்தது. எனினும் கடந்த இரு நாள்களாக காற்றின் வேகம் குறைவடைந்து திடீரென வெப்ப காலநிலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement