சமூக வலைத்தளமான டெலிகிராம் கணக்கின் மூலம் பெண்களின் ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,
டெலிகிராம் சமூக ஊடக பயனாளர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பணம் ஈட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்தபோதிலும் தற்போது மீண்டும் இந்த குற்றச்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பெண்களிடையே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெலிகிராமில் பெண்களின் ஆபாச படங்கள் விற்பனை; விசாரணையை ஆரம்பித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சமூக வலைத்தளமான டெலிகிராம் கணக்கின் மூலம் பெண்களின் ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், டெலிகிராம் சமூக ஊடக பயனாளர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பணம் ஈட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்தபோதிலும் தற்போது மீண்டும் இந்த குற்றச்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பெண்களிடையே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.