• Aug 01 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேக பயணம் - திருத்தப்பட்ட அபராதக் கட்டணம்

shanuja / Jul 31st 2025, 9:44 am
image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. 



அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் GovPay செயலி மூலம் அபராத தொகையைச் செலுத்துகின்ற போதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என  பொலஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகவரம்பை மீறும் நிலையில், செலுத்த வேண்டிய அபராதம் தொடர்பான திருத்தப்பட்ட தொகையுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


 இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணத்தின்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது. 

 

அத்துடன், மணித்தியாலத்திற்கு 130 முதல் 140 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு 140 முதல் 150 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 15,000 ரூபாய் அபராதமும் அறவிடப்படவுள்ளது. 


 இதேவேளை, மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வாகனம் செலுத்தப்படுமானால் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேக பயணம் - திருத்தப்பட்ட அபராதக் கட்டணம் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் GovPay செயலி மூலம் அபராத தொகையைச் செலுத்துகின்ற போதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என  பொலஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.  அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகவரம்பை மீறும் நிலையில், செலுத்த வேண்டிய அபராதம் தொடர்பான திருத்தப்பட்ட தொகையுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணத்தின்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.  அத்துடன், மணித்தியாலத்திற்கு 130 முதல் 140 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு 140 முதல் 150 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 15,000 ரூபாய் அபராதமும் அறவிடப்படவுள்ளது.  இதேவேளை, மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வாகனம் செலுத்தப்படுமானால் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement