• Aug 01 2025

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கியமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - முஜிபுர் எச்சரிக்கை

Chithra / Jul 31st 2025, 8:00 am
image

 

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமையானது முற்றிலும் தவறானதாகும்என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக  மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான தீர்மானத்தை எடுத்தமைக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர் விசா பெறும் நடைமுறையை செயற்படுத்தியிருந்தால் ஒரு சுற்றுலாப் பயணிடம் இருந்து விசா கட்டணமாகக் குறைந்தது 10 டொலரை பெற்றிருக்கலாம்.

அவ்வாறான மாற்று வழிகள் குறித்து சிந்திக்காது எடுத்தவுடன் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக  இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக பலம் மிக்க நாடுகள் கூட குரல் கொடுத்து வருகின்றன. இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளுக்கிடையில் பிளவும் காணப்படுகிறது.  

ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது. 

யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டோருக்கும் இந்நாட்டுக்கு வருவதற்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை அரசாங்கமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. 

இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அநுரகுமாரவின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கியமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - முஜிபுர் எச்சரிக்கை  இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமையானது முற்றிலும் தவறானதாகும்என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக  மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இவ்வாறான தீர்மானத்தை எடுத்தமைக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர் விசா பெறும் நடைமுறையை செயற்படுத்தியிருந்தால் ஒரு சுற்றுலாப் பயணிடம் இருந்து விசா கட்டணமாகக் குறைந்தது 10 டொலரை பெற்றிருக்கலாம்.அவ்வாறான மாற்று வழிகள் குறித்து சிந்திக்காது எடுத்தவுடன் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக பலம் மிக்க நாடுகள் கூட குரல் கொடுத்து வருகின்றன. இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளுக்கிடையில் பிளவும் காணப்படுகிறது.  ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது. யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டோருக்கும் இந்நாட்டுக்கு வருவதற்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை அரசாங்கமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அநுரகுமாரவின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement