மட்டக்களப்பு - வந்தாறுமூலை, மாவடிவேம்பு எல்லைப் பகுதியின் குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன.
பொது மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்த ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடி,
சம்மந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியத்துடன் இன்றைய தினம் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமாக யானைகளை துரத்தும் வெடிகளோ, எல்லை வேலிகளோ இப்பகுதிக்கு அமைக்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனும் தூக்கமில்லாமலும் தங்களது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக மிகவும் துன்பப்படுவதாக தெரிவித்ததோடு,
இது தொடர்பில் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாவடிவேம்பு பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் - அச்சத்தில் மக்கள் மட்டக்களப்பு - வந்தாறுமூலை, மாவடிவேம்பு எல்லைப் பகுதியின் குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன.பொது மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்த ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடி,சம்மந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியத்துடன் இன்றைய தினம் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை காலமாக யானைகளை துரத்தும் வெடிகளோ, எல்லை வேலிகளோ இப்பகுதிக்கு அமைக்கப்படவில்லை.இதனால் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனும் தூக்கமில்லாமலும் தங்களது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக மிகவும் துன்பப்படுவதாக தெரிவித்ததோடு,இது தொடர்பில் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.