• Aug 01 2025

கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை; தாய்க்கு பாதிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை!

shanuja / Jul 31st 2025, 12:05 pm
image

பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை தரித்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.  


உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கான் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 


குறித்த பெண்ணிற்கு  பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. வயிற்று வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


மருத்துவமனையில் வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய பெண்ணிற்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் சிசிக்கையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். 


எனினும் ஸ்கான் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் கருப்பை  வெறுமையாகவே இருந்தது. பின்னர்  மருத்துவர்கள் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கானை மேற்கொள்ள பரிந்துரைத்தனர். 


எம்.ஆர்.ஐ ஸ்கான் பரிசோதனையிலேயே கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரலுக்குள் 12 வார வயதுடைய குழுந்தை கருவுற்றிருந்தததை மருத்துவர்கள் அறிந்தனர். 


கல்லீரலுக்குள் தரித்த கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இந்தியாவில் இதுபோன்ற கருத்தரிப்பு இதுவே  முதல் தடவையாகும். இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. 


இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கர்ப்பம் தாய்க்குப்  பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.


இதனால் இவ்வாறான வயிற்று வலி, வாந்தி இருந்தால் உடனடி சிகிச்சை  எடுக்க வேண்டும். அவ்வாறு உடனடி சிகிச்சை எடுக்கத் தவறினால் அது கல்லீரல் சிதைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை; தாய்க்கு பாதிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை தரித்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கான் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணிற்கு  பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. வயிற்று வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய பெண்ணிற்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் சிசிக்கையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். எனினும் ஸ்கான் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் கருப்பை  வெறுமையாகவே இருந்தது. பின்னர்  மருத்துவர்கள் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கானை மேற்கொள்ள பரிந்துரைத்தனர். எம்.ஆர்.ஐ ஸ்கான் பரிசோதனையிலேயே கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரலுக்குள் 12 வார வயதுடைய குழுந்தை கருவுற்றிருந்தததை மருத்துவர்கள் அறிந்தனர். கல்லீரலுக்குள் தரித்த கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் இதுபோன்ற கருத்தரிப்பு இதுவே  முதல் தடவையாகும். இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கர்ப்பம் தாய்க்குப்  பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதனால் இவ்வாறான வயிற்று வலி, வாந்தி இருந்தால் உடனடி சிகிச்சை  எடுக்க வேண்டும். அவ்வாறு உடனடி சிகிச்சை எடுக்கத் தவறினால் அது கல்லீரல் சிதைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement