மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.
கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் நீர்ப்பாசனம் வனவிலாக, வன ஜீவிகள், மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனை மற்றும் தயாரிப்புகள் தொடர்பிலும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இறால் பண்ணை தொடர்பில் கடந்த காலத்தில் சிறிய நடுத்தர மற்றும் பாரிய செய்கையாளர்கள் என பிரித்து இதில் முதல் கட்டமாக சிறிய பண்ணையாளர்களுக்கு உரிய பகுதிகள் பிரித்து வழங்கப்பட்டு இந்த இறால் பண்ணையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டப்பட்டது.
இதற்கு உரிய திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நன்னீர் மீன்பிடி துறை திணைகள் அதிகாரிகள் குறித்த விடயத்தில் அசமந்த போக்காக செயல்படுவதாகவும் விரைவாக வேலைகளை துரிதப்படுத்தி இறால் பண்ணையினை ஆரம்பிப்பதற்கான ஒரு செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும் எனவும் முன் வைக்கப்பட்டது.
மண்முனை பாலம் அண்டிய பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் அடைந்து காணப்படுவதனால் பிரதேச சபையின் பொறுப்பில் தருவதற்கு முன்னர் வீதி அபிவிருத்தித் திணைக்களம் அந்த பாலத்தினை பராமரித்ததாகவும் அவர்கள் அதற்கான மின் பட்டியலினை செலுத்த தவறியுள்ளதாகவும் நிலுவையில் உள்ள மின் பட்டியலினை செலுத்தி பிரதேச சபையின் கீழ் அதனை தருமாறும் அவ்வாறு தரும் பட்சத்தில் அதனை தாங்கள் பராமரிப்பது ஆகவும் அதற்கான மின் பட்டியலினை பிரதேச சபை செலுத்துவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் நிலுவையில் உள்ள தொகையினை வீதி அபிவிருத்தி திணைக்கலாமா அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையா செலுத்த வேண்டும் என்கின்ற ஒரு சிக்கல் நிலவியது இதன் போது இரண்டு திணைக்களங்களும் யார் பொறுப்பு என்பதனை ஆராய்ந்து அந்த பட்டியலினை செலுத்துமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இ.சிறிநாத், பிரதேச செயலாளர் சீ.சுதாகரன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் நீர்ப்பாசனம் வனவிலாக, வன ஜீவிகள், மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனை மற்றும் தயாரிப்புகள் தொடர்பிலும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.மேலும் இறால் பண்ணை தொடர்பில் கடந்த காலத்தில் சிறிய நடுத்தர மற்றும் பாரிய செய்கையாளர்கள் என பிரித்து இதில் முதல் கட்டமாக சிறிய பண்ணையாளர்களுக்கு உரிய பகுதிகள் பிரித்து வழங்கப்பட்டு இந்த இறால் பண்ணையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டப்பட்டது. இதற்கு உரிய திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நன்னீர் மீன்பிடி துறை திணைகள் அதிகாரிகள் குறித்த விடயத்தில் அசமந்த போக்காக செயல்படுவதாகவும் விரைவாக வேலைகளை துரிதப்படுத்தி இறால் பண்ணையினை ஆரம்பிப்பதற்கான ஒரு செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும் எனவும் முன் வைக்கப்பட்டது.மண்முனை பாலம் அண்டிய பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் அடைந்து காணப்படுவதனால் பிரதேச சபையின் பொறுப்பில் தருவதற்கு முன்னர் வீதி அபிவிருத்தித் திணைக்களம் அந்த பாலத்தினை பராமரித்ததாகவும் அவர்கள் அதற்கான மின் பட்டியலினை செலுத்த தவறியுள்ளதாகவும் நிலுவையில் உள்ள மின் பட்டியலினை செலுத்தி பிரதேச சபையின் கீழ் அதனை தருமாறும் அவ்வாறு தரும் பட்சத்தில் அதனை தாங்கள் பராமரிப்பது ஆகவும் அதற்கான மின் பட்டியலினை பிரதேச சபை செலுத்துவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் நிலுவையில் உள்ள தொகையினை வீதி அபிவிருத்தி திணைக்கலாமா அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையா செலுத்த வேண்டும் என்கின்ற ஒரு சிக்கல் நிலவியது இதன் போது இரண்டு திணைக்களங்களும் யார் பொறுப்பு என்பதனை ஆராய்ந்து அந்த பட்டியலினை செலுத்துமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இ.சிறிநாத், பிரதேச செயலாளர் சீ.சுதாகரன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.