• Jul 31 2025

அமெரிக்காவையும் தாக்கிய சுனாமி அலைகள்;பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்! பீதியில் உலக நாடுகள்

Chithra / Jul 30th 2025, 3:09 pm
image


அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஹவாய் தீவில் ஆழிப்பேரலை அலைகள் தாக்கியுள்ளன.

எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில மணிநேரங்களில் ஜப்பானை ஆழிப்பேரலை அலைகள் தாக்கின.

ரஷ்யாவின் கிழக்கு சக்லைன் பகுதியில் ஆழிப்பேரலை அலைகள் எழும்பிக் கடற்கரையோர கட்டங்களை மூழ்கடித்தன.அதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வந்த 2,000 பேர் அளவில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் ஷகாலின் பிராந்தியத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை தாக்கும் என்ற அச்சத்தில் ஹவாய் தீவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே சீனாவின் ஷங்காய் மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜப்பானில் ஆழிப்பேரலை தாக்கியதால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு சக்தி நிலையத்தில் பணிபுரியும் 4,000 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு ஜப்பானில் 1.9 மில்லியன் மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்திலும், பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவையும் தாக்கிய சுனாமி அலைகள்;பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் பீதியில் உலக நாடுகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஹவாய் தீவில் ஆழிப்பேரலை அலைகள் தாக்கியுள்ளன.எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில மணிநேரங்களில் ஜப்பானை ஆழிப்பேரலை அலைகள் தாக்கின.ரஷ்யாவின் கிழக்கு சக்லைன் பகுதியில் ஆழிப்பேரலை அலைகள் எழும்பிக் கடற்கரையோர கட்டங்களை மூழ்கடித்தன.அதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசித்து வந்த 2,000 பேர் அளவில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ரஷ்யாவின் ஷகாலின் பிராந்தியத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆழிப்பேரலை தாக்கும் என்ற அச்சத்தில் ஹவாய் தீவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே சீனாவின் ஷங்காய் மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஜப்பானில் ஆழிப்பேரலை தாக்கியதால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு சக்தி நிலையத்தில் பணிபுரியும் 4,000 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடக்கு ஜப்பானில் 1.9 மில்லியன் மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நியூசிலாந்திலும், பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement